Saturday, December 25, 2010

வரலாற்றின் நெடுந்தடத்தில் இன்னொரு மைல்கல்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோயமுத்தூர் மாவட்டத்தில் நாகராஜபுரம் தலித் காலனியில் இன்னொரு தீண்டாமைச்சுவரை இடிக்கவைத்திருப்பது வரலாற்றின் நெடுந்தடத்தில் இன்னொரு புதிய மைல்கல்.
நிலம் வியாபாரம் செய்வோரிடையே அவர்கள் வாங்க விற்க வரும் நிலம்
தலித் மக்கள் வாழுகின்ற பகுதிக்கு அருகில் இருந்தால் நிலம் வாங்க யாரும்
வரமாட்டார்கள் எனவே விலை குறைந்து தனது லாபமும் குறைந்துபோகும்
என்ற தீண்டாமைப்புத்தியே அந்த தீண்டாமைச் சுவர்கள் எழுப்பிதற்கு காரணம்
என அறியும் போது நாடே வெட்கப்படவேண்டிய அசிங்கமே.ஒரு சமூகமே
காலங்காலமாக எப்படி கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை தனக்கு லாபம்
மட்டுமே முக்கியம் என நினைக்கும் கோரத்தன முதலாளித்துவ சிந்தனையின்
ஒருபகுதி என்பதையும் பார்க்கமுடிகிறது. ஒட்டுமொத்த சமூகம் நிறைய
படிக்கவேண்டியுள்ளது. படிக்கவைக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
புதிய யுத்திகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. என்று திருந்தும் இந்த இருட்டறைச் சமூகம்?

Thursday, October 28, 2010

எங்கெங்கும் நோக்கினும(் தீண்டாமைச்சுவர்)்தீண்டாமையடா!

ிஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி.உலகமே கைக்குள் வந்துவிட்ட அதிசயம்.காரும் சாலையும்
அதிசயிக்கத்தக்கவிதம்.கம்பியூட்டரில் அபரிமித வளர்ச்சி.ஆனால் மனிதனுக்கு மனிதன்
சாதியால் பேதம் பிரிக்கும் கொடுமையும், ஒதுக்கிவைத்து ஒடுக்கும் அவலமும் இந்தியசமூகத்தில்
ஆணிவேரை அழுத்தமாகவே பாய்ச்சி பக்கவேர்,சல்லிவேர்களோடு கிளைபரப்பி படர்ந்து
புற்றுநோய்போல இருப்பது மனித சமூகம் வெட்கப் படவேண்டியது. கல்விக்கும்,அறிவியலுக்கும்
விழிப்புணர்வுக்கும் தொடர்பு இல்லாமல் போனால் கல்விக்கு எவ்வித அர்த்தமும் இல்லை.தந்தை
பெரியார் பிறந்த தமிழகத்தில் தலித்துகளை ஒதுக்கிவைக்க 19ஆண்டுகளாக இருந்த உத்தபுரம்
சுவர், பல ஆண்டுகளாக நீடித்திருந்த கோவை பெரியார் நகர் ஜீவா தெருவில் அருந்ததியர்
மக்களை ஒதுக்கிவைத்த தீண்டாமைச்சுவர், 25 வருடங்களாக நீடித்திருந்த திருச்சி அருகில்          
தீண்டாமைச் சுவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில்தெருவில் நவம்பர்
18-2010ல் இடிக்கப்பட்டுள்ளது.அரசின்  கண்களுக்கு  கொண்டு போன  தமிழ்நாடு   தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்ஸிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும்  பல கட்ட இயக்கங்கள் நடத்தியபின்பே இடிக்கப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் சமூகம் வெட்கித் தலைகுனியவைக்கும் அவலத்தின் அடையாளங்கள். மூன்றரையாண்டு குழந்தையாகிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்ஸிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்வமுள்ள தலித் அமைப்புகள் முற்போக்கு சிந்தனைகொண்ட நல்லோர்கள் ஆகியோரை    இணைத்துக்கொண்டு நடைபோடும்போதே இவ்வளவு செய்ய
முடிகிறதென்றால் இன்னும் தேசத்தின் அழுக்கைக் கண்டு போக்க நினைக்கும் வீறுகொண்ட
தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் நாடெங்கும் வஞ்சிக்கப்படுகிற இட ஒதுக்கீட்டு
பணியிடங்கள் போன்ற தீண்டாமைச் சுவரையும் இடித்து தலித்துகளின் வாழ்வில் நம்பிக்கை
ஒளியைப் பாய்ச்சலாம். எங்கெங்கு காணிணும் தீண்டாமைச் சுவரடா என்று சொல்லக்
கொதிக்குதடா நெஞ்சம் .