தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோயமுத்தூர் மாவட்டத்தில் நாகராஜபுரம் தலித் காலனியில் இன்னொரு தீண்டாமைச்சுவரை இடிக்கவைத்திருப்பது வரலாற்றின் நெடுந்தடத்தில் இன்னொரு புதிய மைல்கல்.
நிலம் வியாபாரம் செய்வோரிடையே அவர்கள் வாங்க விற்க வரும் நிலம்
தலித் மக்கள் வாழுகின்ற பகுதிக்கு அருகில் இருந்தால் நிலம் வாங்க யாரும்
வரமாட்டார்கள் எனவே விலை குறைந்து தனது லாபமும் குறைந்துபோகும்
என்ற தீண்டாமைப்புத்தியே அந்த தீண்டாமைச் சுவர்கள் எழுப்பிதற்கு காரணம்
என அறியும் போது நாடே வெட்கப்படவேண்டிய அசிங்கமே.ஒரு சமூகமே
காலங்காலமாக எப்படி கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை தனக்கு லாபம்
மட்டுமே முக்கியம் என நினைக்கும் கோரத்தன முதலாளித்துவ சிந்தனையின்
ஒருபகுதி என்பதையும் பார்க்கமுடிகிறது. ஒட்டுமொத்த சமூகம் நிறைய
படிக்கவேண்டியுள்ளது. படிக்கவைக்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
புதிய யுத்திகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. என்று திருந்தும் இந்த இருட்டறைச் சமூகம்?