மனைவி சொல் மந்திரம்தான்
முனைவர்
க.கணேசன். விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்
நீண்ட காலத்துக்குப்பிறகு ஒரு வேன் நிறைய மூட்டாவின் முன்னணி
ஊழியர்கள் குமரி மாவட்டத்தில் கல்லூரிகள்தோறும் பறந்து நோட்டீசுகளோடு ஒவ்வொரு
ஆசிரியரிடமும் பிப்ரவரி 20, 21 தேதிகளில் பொது மக்களின் வாழ்க்கைப் பிரசனைகள்,
கருத்தால் கரத்தால் உழைப்பவர்களின் பென்ஷன், விலைவாசியை குறைத்திட,தொழிற்சங்க
உரிமை காத்திட,காலிப்பணியிடங்களை பூர்த்திசெயவது ,பொதுத்துறை தனியாருக்கு ஏலம்போடுவதை தடுத்திட,அன்னிய
பல்கலைக் கழக மசோதாவை ரத்துசெய்திட உள்ளிட்ட ஜீவாதார கோரிக்கைகளை மத்திய அரசிடம்
வலியுறுத்தி அகில இந்திய வேலைநிறுத்தம் பற்றி விளக்கி ஆசிரியர்களை
வேலைநிறுத்த்த்தில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்துக்கொண்டு வந்தார்கள்.
வேலைநிறுத்த்த்திற்கு பத்து
நாட்களுக்கு முன்பாகவே மனது படபடத்துக்கொண்டு இருந்த்து. மகளுக்கு 22 பிப்ரவரி
வளைக்காப்பு நிகழ்ச்சி என தீர்மானித்து சடங்கு என்ற வளையத்துக்குள்
விழுந்துவிட்டோமே. இரண்டு நாட்கள் வேலைநிறுத்த்த்தில் ஈடுபட்டால் 22ந்தேதி அவசியம்
கல்லூரியில் சேரவேண்டும். இல்லாவிட்டால் ஐந்து நாட்கள் சம்பளவெட்டு வந்துவிடுமே
என்ற சலனம்தான். ஒருநாள் மாலை வீட்டிலிருந்து சங்க செயல்பாட்டிலும் தனிப்பட்ட
வாழக்கையிலும் சொல்லிலும் செயலிலும் ஒன்றுபோல் இருக்கும் தோழர் அனந்துவிடம்
என்னுடைய அலைபேசியில் எனது சூழ்நிலைபற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். அவர்
வேலைநிறுத்த்த்தில் பங்கேற்பதே சரியானது என உரிய ஆலோசனை சொன்னார். எங்களின்
அலைபேசி உரையாடலை டி வி பார்த்துகொண்டே ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி
‘என்னங்க ஸ்டிரைக்கு, லீவு அது இதுன்னு பேசிகிட்டு இருக்கீங்க’ என கேட்டாள். அவளிடம் ‘ இந்த போராட்டம்
மிக முக்கியமானது, இந்தியா முழுக்க 15 கோடி பேர் கலந்து கொள்ளும் வேலைநிறுத்தம். விலைவாசி
, நமக்கு பென்ஷன் உறுதிப்படுத்த உட்பட அத்தியாவசியமான கோரிக்கைகள். நம்ம சம்பந்த
காரங்க இப்படி இந்த தேதி பாத்து வளைக்காப்பு வச்சுப்போட்டாங்க சடங்கு சம்பிரதாயம் சங்கப் பணிக்கு எவ்வளவு
முட்டுக்கட்டையாக இருக்குது பாரு .சம்பளக்கட்டு மத்தவங்களவிட அதிகமாக வருமே
அதுதான் ஒரு ஆலோசனை கேட்டேன்.’ எனச் சொன்னேன். ‘இதுக்கா இந்த புலம்பு
பொலம்புறீங்க மகளுக்கு சடங்குன்னு வச்சிட்டாங்க அந்த நேரத்தில மகளோட பெத்தவங்க
இருக்கணுமில்லே. நமக்கு வேணுமின்னா சாஸ்திரம் சம்பிரதாயம் இல்லாம இருக்கலாம்
சமுதாயம் அப்படி இல்லையே. இந்த சமூகம் இப்படி நெருக்கடி சூழலில் தள்ளிவிடுது பாவம்
அவுங்க என்ன செயவாங்க? வாழ்க்கையில நாம சந்திக்காத இழப்பா! பிள்ளையோட
கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முந்தி
அவ தங்கியிருந்த ரூம்ல அவ கூட இருந்த பி இ முதலாண்டு படித்துக்கொண்டிருந்த பெண் ரூ
78000 மதிப்புள்ள தங்க்க் காப்பை எடுத்துவிட்டு இல்லையென்று நிமிர்ந்துவிட்டாள்
பின்பு அவளை புகார்செய்து வாழ்க்கையை வீணாக்கிவிடக்கூடாதே என்று பெருந்தன்மையை
அழுகையும் ஆத்திரத்தோடும் விட்டுவிட்டாள். எப்படியோ ஒங்களோட நெருங்கிய பேராசிரிய
தோழரகளிடம்,தோழிகளிடம கடன் வாங்கி கல்யாணத்தை அமர்க்களமாக முடிக்கலையா? நீங்க
வாங்குற இந்த சம்பளமே ஜெயிலுக்குப் போயி போராடி சங்கம் கொடுத்த பிச்சை. சம்பளவெட்டு
வந்தா வரட்டுங்க சமாளிக்க வேண்டியதுதான்.’எனச் சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாக
இருந்த்து. எங்கே அவள் பழைய சம்பவத்தை மறந்துட்டாளோ என நினைத்தேன். ஆனால் 1987 என்
மகள் பிறந்த வருடம் அவள் பிறந்து பத்து நாட்கள் கழிந்தவுடன் அய்பக்டோ
போராட்டத்தில் நான், முருகன் சாரெல்லாம் 15 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டோம்.வாடகைக்கு
இருந்த ஊருல எங்களுக்கு வேலை காலிதான்னு எ பரவிட்டு. பெண்ணைக்கொடுத்த மாமனாருக்கு
கதிகலங்கிப்போச்சு. அந்தப் போராட்டம்தான் கல்லூரி ஆசிரியர்களின் சம்பள
மாற்றத்துக்கான் போராட்டம். அதுக்கு அடுத்த முறை 1998 ல் சம்பளத்துகு போராடுனதும்
மனைவிக்கு தெரியும். அதுதான் அவள் சரியாக சொன்னாள். ‘நீ உண்மையிலே கிரேட். ஆனால் பல கல்லூரிகளில் வேலை செய்யுற வாத்தியாருங்க எவ்வளவோ சொத்து பத்து உள்ளவங்க அவுங்களுக்கு இந்த சம்பளம்
எப்படி வந்த்துன்னு தெரியாதுன்னு சொல்லமாட்டேன்.ஆனால் தூங்குறமாதிரி நடிக்கிறவங்களை என்ன செய்யுறது?. ஆயிரம் சப்பக் காரண்ங்களைச் சொல்லிகிட்டும், தேச முழுக்க ஒரு பரந்த நோக்கத்தோடு போராடும்போது சொந்தக் கிளையில் இருக்கும் சிறு சிறு பிரச்னைகளை பிரதானப் படுத்திகிட்டும் ரெண்டு நாள்
சம்பளம் போகுதேன்னு கணக்குப்பாத்துட்டு போராடுறவுங்க பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை
ஒனக்கு வந்த தைரியத்தைமாதிரி அவுங்களுக்குத் வரலையே.’என ஒரு சபாஷ் போட்டு
பெருமைப்பட்டேன். அதன்பிறகு வேலைநிறுத்த்தில் ஈடுபட வேறு யாரிடமும் ஆலோசனை
கேட்கவில்லை. இரண்டு நாட்களும் கல்லூரி முன் நடத்தவேண்டிய ஆர்ப்பாட்டத்தில்
பங்குகொண்டு என் கடமையை நிறைவேற்றியது மனதுக்கு திருப்தியாக இருந்த்து.
சமீபத்தில் ஒருநாள் மீண்டும்
உயிர்பெற்ற நாளாக ஆகிவிட்டது. மணமுடித்த மகள் மருமகனை நீண்டநாட்களாக நாங்கள்
சென்று பார்க்கவில்லையென்று சென்றுவர தீர்மானித்து நானும் மனைவியும் சென்னை சென்று
மனைவியை மகள் வீட்டில் சேர்த்தவுடன் அன்று சென்னையில் சேப்பாக்கத்தில் சமூக
விடுதலை அமைப்பான தமிழ்நாடு தீண்டாமை ஓழிப்பு முன்னணி இந்த அமைப்பில் இருக்கின்ற
பல அமைப்புகளில் மூட்டாவும் உறுப்புச் சங்கம்தான். இச்சங்கம் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக
அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அருந்த்தியர் மக்களுக்கான உள் இட ஒதுக்கீடு
கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்தியது.. அதில் நமது பங்கையும்
செலுத்தவேண்டும் என எண்ணத்தோடு கலந்துகொண்டு மாலை 6 மணிக்கு திரும்புகையில்
வீட்டுக்கு அருகாமையில் 100 அடி சாலையில் எனது அஜாக்கிரதையால் குறுக்கே
கடக்கும்போது ஒரு பைக் ஓட்டியவர் மோதியதால் எனது இடது கையில் முறிவு ஏற்பட்டு
விட்டது. உடனடியாக மருமகனுக்கு தகவல் தெரிவித்து அருகில் இருந்த ஒரு ஆர்த்தோ
மருத்துவரிடம் காட்டி முதல் உதவி சிகச்சை பெற்று எக்ஸ்ரே எடுத்து முறிவு என
தெரிந்துகொண்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஆபரேசன் செய்யவேண்டுமென எச்சரிக்கை
கொடுத்தார் டாக்டர். கையில் கட்டோடு வீட்டுக்கு சென்றவுடன் என் மனைவி குய்யோ
முறையோ என்று கதறுவாள் என வழிநெடுக
நினைத்து பயந்து கொண்டே வந்தேன்.. ஆனால் வீடு வந்தவுடன் கையில் கட்டைப்
பார்த்தவுடன் முதலில் சற்று அதிர்ந்துவிட்டு பின் மனதை தேத்திக்கொண்டு ‘மக
வீட்டுக்கு வந்துருக்கோமே பேசாம வீட்டுல் இருங்க என்று சொன்னா கேக்குறீங்களா? சரி சரி ஏதோ பெரிய அளவு நடக்குறதுக்கு பதில்
இதோடவாவது போயிட்டே’என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள். கொஞ்சம் ஆறுதலா இருந்த்து. ஆபரேசனுக்கு முந்தைய நாள் எனக்கு பலவிதமாக பயம்
கவ்விக்கொண்டது. இரத்த அழுத்த்ம், சக்கரைச நோய் ஆகியன இருப்பதால் ஆபரேசன்
நடக்கும்போது எப்படி ஆகுமோ என சஞ்சலத்தால் என் முகத்தில் ஈ ஆடவில்லை. ஆபரேசன்
தியேட்டரில்
வைத்திருக்கிறார்கள்,மகள்,மனைவி,மைத்துனர் ஆகியோர் உடன்
இருக்கிறார்கள்.சஞ்சலத்தில் இருந்த என்னிடத்தில் ‘ஏங்க மத்தவங்களுக்கெல்லாம்
த்த்துவமெல்லாம் அள்ளிவிடுவீங்க வீராவேஷமாக கோஷமெல்லாம் போடுவீங்க,மேடையில என்னா
போடு போடுவீங்க, இதுக்குப்போயி பயப்படுறீங்களே தைரியமாக இருங்க ஒன்னுஞ்செய்யாது’ என என் மனைவி
சொன்னது சஞ்சலச் சுமையை கொஞ்சம் குறைத்த்து. ஆபரேசன் முடிஞ்சு மயக்கமாக இருந்தபோது
ஏதேதோ உளரி இருக்கிறேன். முழுதும் மயக்கம் தெளிந்தவுடன் உடனிருந்த என்
சொந்தங்களிடம் ‘கியூபா முன்னாள் அதிபர் தோழர் பிடல் காஸ்ட்ரோ எண்பது வயதுக்கு மேல்
இருப்பவர் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேச மேடைக்கு வரும்போது கால தடுமாறி
கீழே விழுந்தபோது அவரின் ஒரு கால முறிவு ஏற்பட்டுவிட்டது. ஆபரேசன் தியேட்டரில்
டாக்டரிடம் சொன்னார் ‘எனக்கு மயக்க ஊசி போடாமல் ஆபரேசன் செய்ய உத்தரவிட்டு
அப்படியே மயக்க ஊசி போடாமல் ஆபரேசன் செய்து கொண்டார். காரணம் சி ஐ ஏ அவரை பலமுறை
அவர்மீது கண்வைத்து குறி தப்பிவிட்டன. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற
எச்சரிக்கையில்தான் இப்படி செய்தார். அதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு
வெட்கமாகத்தான் இருக்குது’ என்று சொன்ன அடுத்த
நிமிடம்’இந்த வார்த்தை ஆபரேசனுக்கு முன்னே
சொல்லியிருக்கணும் உங்க மனசுல நெனச்சிருக்கணும்’ என என் மனைவியின்
இந்த வார்த்தை என்னை மொக்கையாக்கிட்டது. இருந்தாலும் பல நேரங்களில் எங்களுக்குள் காரசாரமாக
விவாதம் அதைத் தொட்டு நீண்ட அமைதி இவைகளெல்லாம் நிகழும்போது ‘இவளுக்கு உலக நடப்பே
தெரியமாட்டேங்குது என்னா பொம்பள’ என்று எனது
ஆணாதிக்கப் புத்தி மேலாதிக்கச் சிந்தனை ஆக்கிரமிப்பு செய்யும். ஆனால் அதி
முக்கியமான அவசரமான சூழலில் அவள் உதிர்த்த வார்த்தைகள்தான் நான் பணிக்கு வந்தவுடன்
இவளைக் காதலித்த காலத்தைவிட இப்போது அதிகம் ஆனந்தமடைந்தேன். சோர்வான சமயங்களில் நெம்புகோல் வார்த்தைகளை வீசுகின்ற அவளின் சொல் மந்திரம்தான் என நெஞ்சத்தில் ஏற்றிக் கொண்டேன்.
27- 02- 2013 ல் எழுதியது மூட்டா மாத புல்லட்டின் வெளி வந்தது.