’அம்பேத்கரின்
பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்?’ தலைப்பில் 2016
அக்டோபர் 16ல் தமிழ் இந்து நாளேட்டில் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் கட்டுரை
தமிழில் சாரி அவர்களால் மொழிபெயர்த்து பிரசுரிக்கப்பட்ட கட்டுரை, காலத்தின்
தேவையான அம்பேத்கரின்தம் மாறிய 60 ஆண்டின்
நினைவாக கட்டுரை வந்திருப்பது பெருமைக்குரியது. மக்களின் மனச்சாட்சியாக
மக்களுக்கு தெரியாத அல்லது காலங்காலமாக மறைக்கப்பட்ட சமூக வரலாற்றுக் கருத்துகளை
வெளிப்படுத்தி வந்தி கொண்டிருக்கும் தமிழ் இந்து நாளேட்டிற்கும்
நன்றி. அம்பேத்கர் 1935 லேயேதிட்டமிட்டவர் பௌத்தம்
மாறுவதற்கு தாமதம் ஏன்? என்ற உப தலைப்பின்கீழ் கட்டுரையாளர்
குறிப்பிட்டுருப்பது’ அம்பேத்கர்
‘இந்து மதத்திலிருந்து வெளியேறுவேன்’ என்று கூறியதும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய
மதங்களைத் சேர்ந்தவர்கள் அவருடன் தொடர்புகொண்டனர்.அவ்விரண்டும் இந்தியாவில்
தோன்றிய மதங்கள் அல்ல என்பதால் அவர்களுடைய அழைப்புகளை அம்பேத்கர் நிராகரித்தார்.
சீக்கிய மதத்தில் சேருவது பற்றிச் சில காலம் பரிசீலித்தார்.அங்கும் இந்து மதத்தைப்
போல சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்ததும் அந்த முடிவைக் கைவிட்டார்’
என்று குறிப்பிடுவது சரியானது அல்ல. மதங்கள் இந்தியாவில் தோன்றாததால் அவரின்
தேர்வு பௌத்தம் என்று மட்டும் சொல்ல முடியாது.அதைவிட வலுவான காரணங்களை ஆய்வு
செய்கின்றார். அனைத்து மதங்களையும் தீர்க்கமாக ஆய்வு செய்தே முடிவுக்கு வந்தார்.
இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புபகளையும் துண்டித்துக்கொள்ள 1935லேயே
அக்டோபரில் வெளிப்படுத்தினார்.அதன் சுருக்கமான காரணம் என்கின்ற போது அம்பேத்கர்
முதன்மையாக முன்வைப்பது,இந்து மதத்தில் சமத்துவம், சகோதரத்துவம்,சுதந்திரம் ஆகியவை
இல்லை. மனுதர்ம கொடுக்கு,வர்ணாஸ்ரம பாகுபாடு இவற்றையெல்லாம் சமூகத்தின்
பிளவுக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் என்று ஆய்வு செய்ததோடு,கிறிஸ்தவத்திலும்
இஸ்லாமிலும் கடவுள்களின் அவதாரங்களாக யேசுவும், நபிகள் நாயகமும் என்று பிரகடனப்
படுத்துவதாலும் அவைகளை நிராகரிக்கிறார். பின்பு சீக்கிய மதத்தில் பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்ற தன்மை இருந்தாலுங்கூட, இந்து மதத்தில் இருக்கின்ற சாதிப்
பிரிவுகள் சமணத்திலும் இருப்பதால் அதையும் நிராகரித்துவிட்டு, உண்மையான பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்’ என்ற கோட்பாட்டை அடிப்படையாக உள்ளடக்கி இருக்கும் பௌத்த
மதத்தில் சமத்துவம், சகோதரத்துவம்,சுதந்திரம் இருக்கின்றது என்பதை குறிப்பிட்டு,
புத்தர் தான் கடவுளின் அவதாரமில்லை என அறிவிப்பதோடு மக்களின் துன்ப துயரங்களை
தீர்ப்பதற்கு தெளிவான கொள்கை கோட்பாடுகளை விரிவான அவரின் ஆய்வின்
அடிப்படையில் அம்மதத்தை தேர்வு செய்தார் என்பதை விரிவாகச் சொல்லியிருந்தால் வாசகர்கள்
தெளிவு பெற்றிருக்கக் கூடும்.
இந்து மதம்
எப்படிப்பட்டது?
அம்பேத்கர்
தான் சார்ந்துள்ள இந்து மதம் பற்றி விரிவான ஆய்வு செய்ததில் ‘இந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற
முடியாது.இந்து மதத்தில் படிநிலை சமத்துவமின்மை முஉறை நடைமுறைநில் இருந்துவருவதால்
உயர் வருணத்தவர்களும் சாதியினரும்தான் நலமுறுகின்றனர,.வளம் பெறுகின்றனர். ஆனால்
மற்றவர்களின் நிலை என்ன கதி? ஒரு பிராணப் பெண், குழந்தை பெற்ற கணமே அவளின் கண்கள்
உயர்நீதிமன்ற நீதுபதி பதவி ங்கு காலியாக இருக்கிறது என்று சல்லடை போட்டு
தூழாவுகின்றன. இதறகு மாறாக, நமது தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும் போது எங்கு
தோட்டி வேலை காலியாக இருக்கிறது. என்புதான் அவளின் கண்கள் தேடுகின்றன. இத்தகைய ஒரு
விசித்திரமான, வேதனையான அமைப்புமுறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண அமைப்பு
முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும்? புத்த
மதத்தில்தான் வாழ்வு வளத்தையும் நலத்தையும் எய்த முடியும்.’ என்ற தெளிவான
முடிவுக்கு வருகிறார்.
புத்தரின் சமத்துவ
தன்மை
பகவான்
புத்தர் சொன்ன வார்த்தைகள் சமூகப் பாகுபாட்டை புரட்டிப் போடுவதால்தான் அம்பேத்கர்
வாழ்வின் வளத்தையும்,நலத்தையும் பெற முடியும் என உறுதிப் படுத்தினார். புத்தர்
பிக்குகளிடம் ‘ஓ பிக்குகளே! நீங்கள்
பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். ந்திகள்ஃஃ
அவற்றின் மாகாணங்களில் பெருக்கெடுத்துச் செல்லும் போது தனியாகவே அவ்வாறு
செல்கின்றன. ஆனால் அவை கடலில் கலந்து விடும்போது தமது தனித்தன்மையை இழந்து
விடுகின்றன; ஆறும் கடலும் ஒன்றாகி விடுகின்றன.பௌத்த சங்கம் ஒரு மகா சமுத்திரம்
போன்றது இந்த சங்கத்தில் அனைவரும் சமத்துவமானவர்கள்,நதிகள் . சமுத்திரத்தில்
கலந்து விடும் போது எது கங்கையின் நீர், எது மகாநதியின் நீர் என்று இனம்
காணமுடியாது. இதே போன்றுதான் நாம் புத்த சங்கத்தில் சேர்ந்துவிடும்போது நாம் நமது
சாதியை இழந்து விடுகின்றோம். அனைவரும் சரிசமத்துவமாகி விடுகிறோம்,’ என சொன்னது
மனதிலேற்றி முடிவுக்கு வருகிறார்.
பௌத்தத்தை ஏன் தேர்வு
செய்தார்?
அம்பேத்கரின் பேட்டி;
அம்பேத்கர் B B C 1956
மே மாதத்தில் அளித்த பேட்டியில்’ நான் பௌத்த மதத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக்
காரணம், அது வேறு எந்த மதத்திலும் சொல்லப்படாத மூன்று முக்கிய கொள்கைகளைத்
தருகிறது. ஒன்று பிரஜ்னா ( மூடநம்பிக்கைகளுக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட
கொள்கைகளை புரிந்து கொள்வது.) இரண்டுந கருணா( கருணை கொள்வது) மூன்று சமதா
(சமத்துவம்) ஆகியவையே அவை. ஒரு தனிமனதன் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு
இவைகள்தான் தேவை’இன்னும் சமத்துவமின்மையும் ஒடுக்கப்பட்ட நிலமையையும்
ஆதிரித்துவந்த எனது பழைய சமயத்தை விட்டு வெளியே வந்ததன் மூலம் நான் மறுபிறவி
எடுத்துள்ளேன்’ என
அழுத்தமாகவே ஆழமான விதத்திலும் அறிவிப்பு செய்து 22 உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டு
1956 அக்டோபர்14 ல் நாக்பூரில் ஆறு லட்சம் பேரோடு பௌத்ததிற்கு மாறினார்
மதம் மாறுவதற்கு
தேர்வு செய்த இடமும் தேதியின் வரலாறு;
இந்த
விபரங்களை கட்டுரையாளர் விளக்குவதில் தவறான விபரங்கள் இருக்கின்றன. நாக்பூரை ஏன்
தேர்ந்தெடுத்தாரென்றால்,’நாக்பூர் நகரம்
பௌத்தத்தை உலகம் முழுவதும் பரப்பி வந்த நாகர்கள் வாழ்ந்த பழம்பெரும்
இடமாகும்.இன்றைக்குள்ள தீண்டப்படாத மக்கள் அன்றைக்கிருந்த நாகர்களின் சந்ததிகள்’
என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்தார்.
ஏன் அக்டோபர்,14 -1956
அக்டோபர் 14 ஞாயிறு விடுமுறை நாள் எனவும், இந்து பஞ்சாங்கப்படி விஜயதசமி பண்டிகை
நாள் எனவும் கட்டுரையாளர் குறிப்பிட்டுருப்பது தவறு. அம்பேத்கர் இந்து
மதமே வேண்டாம் என 1935லேயே முடிவு எடுத்தவர்,
எப்படி இந்து பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்திருப்பார்? இதுவும் தவறான
கருத்து ‘புத்த மகான் மகாபரி நிர்வாணமடைந்து 2500 ஆண்டுகள் முடிவடைவதால் அவர் மத
மாற்றத்திற்கு தேர்ந்தெடுத்த ஆண்டு 1956 . மௌரிய மன்னரான அசோகர் கலிஙப்போரின் கொடூரம்
கண்டுமனம் மாறி’ மக்களை இனி அன்பாலும் அரவணைப்பாலும் வெற்றி கொள்ள வேண்டுமேதவிர,
வன்முறையால் அல்ல’என்று முடிவெடுத்து பௌத்ததை தழுவிய நாளே அக்டோபர் 14. இந்த நாளை பௌத்தர்கள் அசோகர் விஜயதசமி நாள்’ என கொண்டாடுவார்களாம்.எனவே அந்த நாளை
தேர்ந்தெடுத்தார். இந்து மத நம்பிக்கையில் அல்ல.
கட்டுரையாளரின் ஏக்கம்
நியாயமானதுதான்.
‘மதம் மாறிய சில வாரங்களிலேயே அம்பேத்கர்
மறைந்துபோனதுதான் பெரிய சோகம். அவர்பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள்
வாழ்ந்திருந்து கோடிக்கணக்கான இந்தியர்களை பௌத்தத்தின் பக்கம் ஈர்த்திருந்தால்
சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த மதமே மேலும் சீர்திருத்தி, சாதியரீதியான ஏற்ற
தாழ்வுகளைக் கைவிடவும், கண்மூடித்தனமான பல பழக்கங்கள் மண்மூடிப் போகவும் கூட
வழியேற்பட்டிருக்கும். இந்திய மக்களை உய்விக்க வந்த மாபெரும் சீர்திருத்தவாதியின்
மறைவால், இந்துக்களான நாம் மீண்டும் பழைய சாதியக் கண்ணோட்டம் மிக்க பாரபட்சமான
மனநிலையிலேயே உறைந்து விட்டோம்’ என்று
கட்டுரையாளர் அழுத்தமாக தனது தேசநலன் சார்ந்த உள்ளார்ந்த ஏக்கத்தை
வெளிப்படுத்தியிருப்பதும், ‘ ஒருவேளை
அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், பல லட்சக்
கணக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் புத்த மதத்தை தழுவியிருப்பார்கள். அது இந்தியாவின்
சமூக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும். ‘ என்றும்
குறிப்பிட்டுருப்பது மாபெரும் அரசியல் சட்ட மேதை அம்பேத்கரின் (ஆனநத் டெல்டும்ப்டே
வார்த்தையில் சொல்வதென்றால்) ஒரு ஃபேபியன் சோசலிஸ்ட் அம்பேத்கரின் சிந்தனைக்கும்
கடுமையான உழைப்புக்கும் சிறந்த மரியாதை மாலை சூட்டியிருப்பதாகவை நான் எண்ணுகிறேன்.
கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு மிக உயர்வானதுதான். ஆனால் ஒன்று இந்த நாட்டில் தலித்
மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சமத்துவம் சம மரியாதை கிடைக்கும் என மதம் மாறியவர்களின்
நிலை தலித் கிறிஸ்தவர்கள் எனும் நிலையில் அங்கும் சம நிலை இல்லை, வாழ்வில்
ஒரளவுதான் மரியாதை கிடைத்துள்ளது. ஆனால் பௌத்ததில் அதன்கொள்கைகளும் நடைமுறைகளும்
மூடநம்பிக்கையற்ற, சமத்துவம் சகோதரத்துவம் அடிப்படை கொள்கைகள் இருப்பதால் கட்டுரையாளரின்
கனவு நனவாகியிருக்கும். இந்தியாவில் கேரளாவில் இந்து மதத்திற்குள்ளேயே
பிற்போக்குத் தனத்திற்கெதிராக போராடிய தைக்காட்டு அய்யா,ஸ்ரீமன் நாராயண குரு,
சட்டம்பி சாமிகள், அய்யங்காளி ஆகியோரின் சமூக சீர்திருத்த இயக்கங்கள்
மேலோங்கி வந்ததால் அங்கு சாதி வெறி என்பது இல்லாத இடமாக மாறியிருப்பதும்,அந்த
மக்களிடையே மதவெறி எட்டிப் பார்க்க முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து
மதத்திற்குள் வைதீக சாதி மேலாதிக்க ஒடுக்குமுறைக்கெதிராக போராடி
சித்திரவதைக்குட்பட்டு பள்ளு, பறை பதினெட்டு சாதியினரின் விடுதலைக்கு 1840 காலகட்டத்தில்
பாடுபட்டு அவர் தன்னை ிநாராயணரின் அவதாரம் என்று பிரகடனப் படுத்திக்
கொண்டாலும்,சமூக ஒடுக்குமுறைக்கெதிரான இயக்கம் நடத்தியதால் அந்த மண்ணில் சாதிவெறி
என்பது குறைந்திருப்பதைக் காண முடியும். வேறு மாவட்டங்களில் உள்ளதுபோல
துருத்திக்கொண்டு இல்லை.ஆனால் 1982க்கு பிறகு மண்டைக்காட்டு கலவரத்திற்குப் பின்
மத அரசியல் அடிப்படையில் பிளவு ஏற்பட்டிருப்பது துரதிஷ்டமானது.என்றாலும்
சீர்திருத்த இயக்கத்திற்கு ஒரளவு பலன் கிடைத்திருக்கிறது. வைதீக மதத்திற்குள்ளேயே
இவர்களின் இயக்கங்களுக்கு ஒரு குறிப்பட்ட அளவு மாற்றம் வந்துள்ளது என்று சொன்னால்
,, அம்பேத்கரே தனது ஆய்வில் ’புத்தரா மார்க்ஸா’ கட்டுரையில் புத்தரிடம் மார்கஸிய
அடிப்படை கொள்கைகள் உள்ளே பொதிந்து கிடக்கின்றன.என்று குறிப்பிடுவதால்,
அம்பேத்கரின் மதமாற்ற நிகழ்ச்சி இந்தியாவில் ஏராளமான சமூக
சீர்திருத்தவாதிகளுக்கும், இந்திய பாட்டாளி மக்களுக்கும், முற்போக்கு
இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்திருக்கக் கூடும். மனுஸ்மிருதியை அம்பேத்கர்
எரித்த செயல் சனாதன மதவாதிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல ,ஆரம்பத்திலேயே
மதவெறியர்களின் ஆதிக்கம் குறைந்து பண்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல, பொருளாதார அரசியல்
தளங்களில் உலக அளவில் வல்லரசாக ஆக முடியாவிட்டாலும், முன்னேறிய நாடுகளின்
பட்டியலில் கடைசி இடத்திலாவது பங்கு பெற்று பன்முக கலாச்சாரத்தில் உறுதியாக நின்று
உண்மையான மதச்சார்பின்மையை உறுதியாக கட்டிக்காக்கும் நாடாக இருந்து மதவெறி என்பது
மண்ணில் புதைந்திருக்கும் என மதிப்பீடு செய்யலாம்..
முனைவர் க.கணேசன். கொட்டாரம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு உறுப்பினர் .srikaruppan12@gmail.com
No comments:
Post a Comment