Friday, March 1, 2013

ஏலமய்யா ஏலம்-கல்வி
எலமய்யா  ஏலம்.
கூவி விற்கிறான் சந்தையில் -தேசம்
கூனிக் குறுகுது வெட்கத்தில்
                                                                                       (ஏலமய்யா ஏலம்)
ஓலைக் குடிசையில் ஒட்டிக் கெடப்பவன்
பட்டினியால் தினம் வாடுறான்
நாளும் பொழுதெல்லாம் வேர்வை சிந்தி-அவன்
ஏறும் விலையில் வேகுறான்.
ஏழைகள் கல்லூரி காலடி வைச்சா
எட்டி ஒதைக்குது கட்டணம் -பணக்
கட்டோடு வாசலில் கண்ணைச்சிமிட்டுனா
பல்லை இழிக்குது நிர்வாகம்.
                                                                                    (
கறுப்புப் பணமும் கள்ளச்சந்தையில்
கடலில் கறைக்கும் காயம் போல
கல்விக்கு நிதியும் திட்டத்திலே
மாடி மாடியா கட்டிடமெல்லாம்
மலைகளை ஒடச்சு உயருது
ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவா
உயர்கல்வி சேவை புரியுதுகொள்ளையடிக்கும்
கொள்ளையடிக்கும் கோமான்களுக்கு
அன்னிய எருமை மாடுகளெல்லாம் -இந்திய
கலவிப் பூங்காவை மேயுது.
தாராளமயத்தின் கோரத் தனம்
சமூக நீதியைப் புதைக்குது
தேங்கிய குட்டைக் கல்வி திட்டமும்
பேதங்கள் நீக்க மறுக்குது.
                                                                                 (ஏலமய்யா ஏலம்)புயலும் மழையும் பேரிகை கொட்டி
புதிய பாதை அமைக்குது
அழுக்கை விரட்டி கொடுமை தகர்க்க-
சங்கொலி இங்கே முழங்குது-வீதி
புதிய பாடம் நடத்துது.

                              

No comments:

Post a Comment