விழிநீர் துடைத்து வழியைக் காட்டிய திரை நாடகப் பேனா.க்கள்
‘Old is gold ‘ என்ற பழைய திரையிசைப் பாடல்களடங்கிய குறுந்தகடு வாங்கி பாடல்களை போட்டுக் கேட்டேன். அவைகள் இனிமையாகவும், அறிவுக்கு தீனி போடுவதாகவும் இருந்தன. அக்காலத்தில் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் ஆகியோர் மத்தியில் மக்களிடையே நல்ல கருத்துகளை சுமந்து செல்லவேண்டுமென தாகம் இருந்த்து. கவிஞர்கள் பட்டுக்கோட்டை, மருதகாசி, கண்ணதாசன்,கம்பதாசன்,உடுமலை நாராயண கவி, கு ம பாலசுப்ரமணியம்,தஞ்சை ராமையாதாஸ், கலைஞர் கருணாநிதி, பஞ்சு அருணாச்சலம் இன்னும் பல கவிஞர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் கருத்துகளை நயம்பட எடுத்துரைப்பதில் அவர்களின் பேனா வாழ்வீச்சு அரோக்கியமாக இருக்கும். இசையமைப்பாளர்களும் ஒருவரையொருவர் மிஞ்சும அளவு கொடிகட்டி பறந்தவர்கள். கிராமங்களில் அமைந்துள்ள டூரிங் டாக்கீஸில் படம் பார்த்துக்கொண்டிருந்ந பெரும்பாலான குடும்ப ஆண்களும் பெண்களும் திரையில் நடிகர்கள் அழுதால் இவர்களின் கண்ணில் கண்ணீர் மாலை மாலையாக வரும். அவர்கள் சிரித்தால் இவர்களும் சிரிப்பார்கள்.ஒருவகையில பார்த்தால் ஒரளவு மனிதனுக்கு உலகத்தைப் புரியவைத்த்தும்,வாழ்க்கைக்கு ஆரோக்கியமான பாதையைக் காட்டியதும் திரைப்படம் எனலாம்முத்துராமன் நடித்த’.ந்த்தையில் முத்து’,எஸ்.எஸ் ஆர். விஜயகுமாரி நடித்த ‘தங்கரத்திணம்’ ஆகியவைகள் அன்றைய காலத்தில் (இன்றும் அப்படியே அதுவும நாகரிக வடிவில் வளரந்துள்ள) தீண்டாமைக்கொடுமைகளை சித்தரித்தன.இப்படியெல்லாம் திரைப்படம் அமைந்த காலமது மதவெறியைக்கூட சாடாமல் விட்டதில்லை. 1955ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாஸ்திகன்’ என்ற திரைப்படத்த்திற்கு கவிஞர் கு.மா.பாலசுப்ரமிணியம் எழுதிய பாடல் மனதைக் கவரும்படியாக உள்ளது. திருச்சி லோகநாதனின் வெங்கலக்குரலின் இனிமை நம்மை சுண்டி இழுக்கும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இருபகுதி மக்களில் பெண்கள் சூரையாடப்பட்ட அவலம், உட்பட குழந்தைகள் அநாதைகளாக ஆக்கப்பட்ட கொடூரம், கவிஞரின் உள்ளத்தை பாதித்திருக்கவேண்டும்.தேச்ப்பற்றை நேர்த்தியாகவே திரைக்கதையாக வடித்து மக்களின் மனதில் ஒற்றுமையை விதைத்த அற்புத காலமது. மதவெறி சிந்தனை இன்னும் மறையாமல் இருப்பதாலும், கூடவே அரசியலிலும் கலந்து ‘ மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியுறுக்கவேண்டும்’ என மாமியார்(சொலவடை) ஆசைபோல நாடு வாழ்வியல் ரீதியாக எக்கேடுகெட்டாலென்ன மதவெறி மூலதனத்தோடு நாற்காலியைப் பிடிக்கத் துடிக்கும் இக்காலத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது. பாடல் இதுதான்.
மாநிலமே சில மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா-மனிதன் மாறியதேனய்யா
வானத்துநிலவில் ஆதவன் திசையில் மாறுதல் ஏதய்யா-மனிதன் மாறியதேனய்யா {மாநிலமே}
மண்ணில் பலவித பிரிவினையாலே மனிதன் மிருகமாய் ஆனதனாலே
என்னே கொடுமை எங்குமிந்நாளே வீணர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அனபையும் பண்பையும் தன்னலத்தால் பலியாக்கிடும் பேதையாய்-மனிதன் மாறியதேனய்யா- {மாநிலமே}
ஈஸ்வர அல்லா தாஸர்கள் இன்றோ பூசனை செய்தல் நாசத்தையன்றோ
தேசம் சுடுகாடாவது நன்றோ தெய்வத்தின் பேரால் கொல்வதுமுண்டோ
தேசமறந்து ஆசைமிகுந்து மோசடிபுரிபவனாய்-மனிதன்மாறியதேனய்யா. {மாநிலமே}
அன்பே ஆண்டவன் என்று நினைத்தால் அனைவரும் ஓர்குலமாகவே வாழ்ந்தால்
தனலாய் வெந்தே வீடுகள் விழுமா தாய்கள் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தியெனும் காந்தியின் குரல்கள் ஓய்ந்திடச் செய்பவனாய்-மனிதன் மாறியதேனய்யா. {மாநிலமே}
இப்போதெல்லாம் திரையில் கவிஞர்களின் பேனா மதவெறியை இவ்வளவு கூர்மையாக் குத்திக் கிழிக்கின்றனவா? கொஞ்சம் தேடித்தான் பார்க்கவேண்டும்.
நான் பிறந்து வளர்ந்த்து ஒலைக்குடிசை. பத்துவயதாக இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். கட்டுடல்மிக்க கூலிவேலை செயத என் தாய் மூன்று குழந்தைகளை ‘கைச்சிறகால் குஞ்சுகளை காக்கும் கிளிபோல மெய்ச்சிறகால் போர்த்தியவள்’ பட்ட பாடு அதிகம். மழை பெய்யும் இரவுவேளை கூரையிலிருந்து வீட்டுக்குள் மழைநீர் ஓழுகும். மழை கொட்டும் இடங்களில் பாத்திரங்களை வைத்தாலும் வீட்டுக்குள் தேங்கிய தண்ணீரை சணல் சாக்கை எடுத்து நனைத்து நனைத்து தண்ணீரை ஒட்டி எடுக்கும்போது கொஞ்சம் நனையாமல் இருக்கும் இடத்தில் நாங்கள் அரைத்தூக்கத்தில் இருப்போம். அப்போது எங்களுக்கு இது புதுமையாகத் தெரியவில்லை,காரணம் எங்கள் வீடு மட்டும் இப்படி இல்லை எங்கள ஊரில் நிறையவீட்டின் நிலை இதுதான்.. இப்படி வறுமையை மென்று விழுங்கிய நான் சமீபத்தில் அன்றைய கவிஞர் ஜெயகாந்தனும் மக்கள் கவி பட்டுக்கோட்டையாரும் பங்கெடுத்த ‘பாதை தெரியுது பார்’என்ற நாடகத்திற்கு கவி ஜெயகாந்தன் எழுதிய பாடலைக் கேட்கும்போது எனது பழைய வாழ்க்கை கண்முன்னே வந்த்து. என்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என் தாய் உட்பட வறுமையை தோளில் போட்டு தாலாட்டும் தாய்மார்களின் மனது எப்படி பதை பதைக்கும். பின்னால் காரல் மார்கஸ் வரலாற்றை படிக்கும்போது பாட்டாளி வர்க்கத் த்த்துவத்தை சொன்னவனை நாடு கடத்தி வைத்திருந்த சமயத்தில் மார்க்ஸும் ஜென்னியும் பட்ட வறுமையை விடவா நம் வறுமை என நினைத்து என் கண்ணீரை துடைத்துக்கொண்டேன். குழந்தை ஜென்னியின் மார்பில் பசியின் கோரத்தில் பாலருந்த்த் துடிக்கிறது பால் வரவில்லை தாயின் கண்ணீரே குழந்தையின் வாயில் விழுகிறது.சரிவர தாயிக்கு உணவு இல்லாமல் இருந்தால் தாயிக்கு பால் எங்கிருந்து சுரக்கும்.இவறையெல்லாம் கிளறி விட்ட ஜெயகாந்தன் பாடல் இதுதான்.
' தாயொரு ஏழை அறியாமல்-துயர்
தந்திட வந்தாய் என் மகனே
நீயொரு செல்வம் என்றிடுவார்-என்
நெஞ்சக்குமுறலைச் சொல்லிடுவாய்
சின்னஞ் சிறிய குடிசையிலே-ஒளி
சிந்திடவந்த திரிவிளக்கே
எண்ணெயில்லாமல் பொன்விளக்கின்-திரி
ஆடித்துடிக்குது ஆண்டவனே
நட்ட நடுத் தெரு வீதியிலே-பனி
கொட்டிடும் குளிரில் நடுங்குகிறாய்
ஒட்டிய மார்பினில் முகம்புதைத்தே-கண்
உறங்கிடடா என் கண்மணியே! '
இப்படி இலக்கியம் உழைப்பவனின் அருகில் அமர்ந்து அவரகளைப் பாடியது. சோகத்தை மட்டுமல்ல, சோகத்தை மாற்றி விழிநீர் துடைத்து வழியையும் காட்டிய திரை நாடக பேனாக்கள் ஜொலித்த இலக்கிய உலகம்.
அருமையான பதிவு.மழுங்கிய சிந்தனைகளை மாண்புறச்
ReplyDeleteசெய்யும் பதிவு.அதிகமாக எழுதுங்கள் தோழரே!
மிக்க நன்றி தோழரே.
ReplyDelete