ஆனந்த வெளிச்சம்
ஆனந்த வெளிச்சம்
ஆத்தூரு கிராமத்து மக்கள் காயதிரியையும் ரோஜாவையும் வச்சகண்ணுவாங்காம ஆச்சரியமா பாத்தாங்க ‘இந்தப பெண்களுக்கு இவ்வளவு துணிச்சலா!’ன்னு ஒருவருக்கொருவர் பேசிக்கிட்டாங்க. ரோஜாவும் காயத்ரியும் சிறுவயதிலேயே தன் அம்மா,அப்பாவையும் விபத்தில் இழந்து. அவர்கள் இருவரும் அனாதை இல்லத்தில் இருந்துதான் வளர்ந்தாங்க படிச்சாங்க.
இப்போது
ரோஜா வானொலி நிலையத்திலும், காயத்ரி பெண்கள் அழகு நிலையத்திலும்
வேலைபார்க்கிறதையும். நல்ல சம்பளம் வாங்கி எந்த மாசுமரு இல்லாம யாரோட
வாயிக்கும் அவலாக இல்லாம. இருவரும் ஒற்றுமையாக இருக்கிறதப் பாத்து
ஊருக்காரங்க பெருமையாக நெனப்பாங்க அந்த ஊரு இளவட்டங்க கூட அக்காங்குற
சொல்லுக்கு அடுத்த சொல்லு சொல்லமாட்டாங்க சுத்துப்பட்டு கிராமத்துல
இப்படியொரு ஊரும் இல்ல, இவங்களப் போல பெண்களும் இல்ல அவுங்க வேலைக்கு போன
நேரம்போக மத்தநேரம் கடைக்கும் வேற எங்க போனாலும் சேந்தே போவாங்க.
அன்னைக்கு
ஆடி பதினெட்டு முன்பெல்லாம் விவசாய மக்கள் இந்த நாளுல ஊரெல்லாம் கூடிக்
கொண்டாடி பூமியை சாமியா நெனச்சு கும்பிட்டு விதையை வெதைச்ச மக்களோட
பழக்கம் இப்போது கோயில்ல போயி சாமி கும்பிடுறது. கடலுல போயி குளிக்கிறதுமா
மாறிப்போச்சு முத்தம்மா ஆச்சி பதினோரு மணிக்கெல்லாம் ரோஜாவும்
காயத்திரியும் வீட்டுக்கு திரும்பிய போது ஊரைக்கூட்டிருச்சு
முந்துன நாளு இரவெல்லாம் கோயிலுக்கு போற நெனப்புலேயே காயத்திரி உறங்குனா. காலைல ஆறு மணிக்கு
‘ரோஜா ரோஜா’ ன்னு குரல்வந்த திசையை பார்த்தா ரோஜா.அவளுடைய அக்கா காயத்ரி கூப்பிட்டா ‘ என்ன அக்கா ‘ ன்னு கேட்டா.’ரோஜா ‘இன்னைக்கு ஆடி பதினெட்டு கோயிலுகுப் போயிட்டு வரலாமா?’
உடனே ரோஜா ‘சரி’ன்னு சொனனா
இருவரும்
கோவிலுக்கு சென்றனர். அங்கு விளக்குபூஜை முடிந்து வெளியே வந்த நேரம் அங்கு
தள்ளாடும் வயதில் ஒரு கணவன் மனைவி ஜோடி கோயிலின் முன்னே அமர்ந்திருக்க
அவர்களின் தட்டில் சில சில்லறைக் காசுகள்.போவோர் வருவோரில் சிலர் காசைப்
போட்டார்கள்.சிலர் அவர்களின் கையைத் தட்டிவிட்டு ஏளனமாய் பார்த்துவிட்டு
சென்றார்கள். இதைப் பார்த்ததும் ரோஜாவுக்கு மனம்
தாங்கவில்லை.அவர்களிடம் சென்று அவர்களின் கண்ணீர் கதையைக் கேட்டாள்.
அவர்களுக்கும் மூன்று ஆண் பிள்ளைகளாம். எல்லோரையும் நல்லபடியாக படிக்க
வைத்து வேலைக்கும் அனுப்பி வைத்து அவர்களின் சொந்த செலவில் கண்குளிர
திருமணமும் நடத்தி வைத்தார்களாம். அவர்களும் திருமணமான மறுநாளே தனி
குடித்தனத்துக்கு ஆசைப்பட்டு மூவரும் தனித் தனியாக
சென்றுவிட்டார்களாம்.அம்மா அப்பாவின் இரத்தத்தை வியர்வையாக சிந்தி வாங்கிய
சொத்தை பிரித்துக் கொண்டு சென்று விட்டனர்.நாங்கள் இப்போது அனாதை என்று
சொன்னவுடன் ரோஜாவுக்கு மனது ஒருமாதிரி கணத்தது. ரோஜாவின் கரம் அந்த முதிய
கரத்தை இறுக்கப் பிடித்தது. அவர்களிடம் ரோஜா ‘ எங்க நிலைமயும் உங்கள மாதிரிதான் உங்களுக்கு பிள்ளைங்க உங்களோட இல்லை. எங்களுக்கு அப்பா அம்மா எங்களொடஇல்லை.
‘எங்க வீட்டிற்கு வாறீங்களா’ எங்களுக்கு அம்மா அப்பா கூட வாழ ஆசையாக இருக்குது.’ அந்த இளைய குரல் கேட்டது.. உடனே காயத்திரி ‘ஏய் ரோஜா ‘ அவுங்களுக்கு பிள்ளைங்க இருக்குது என்னைக்காவாவது ஒருநாள் திருந்தி வருவாங்க’நீ வா’ என்று கையை பிடித்தாள்.அதற்கு ரோஜா கையைத் தட்டிவிட்டு’நீ
அம்மா,அப்பா முகத்தைப் பாத்து அவுங்க கூட இப்படி ஊர்சுத்தி அவுங்க கையால
சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கே ஆனா எனக்கு அந்த குடுப்பன இல்லை. அதுதான்
இவுங்களப் பாத்தவுடன நமக்கு ஒரு அம்மா அப்பா வேனும்னு தோனுச்சு. அக்கா நா
சொன்னது தப்பா? உடனே காயத்திரி ‘எல்லாரும்
குழந்தைகள தத்து எடுத்து வளப்பாங்க. ஆனா நீ ஒரு தாயையும் தந்தையையும்
தத்து எடுக்கலாமுன்னு சொல்லுற.உன்னுடைய இரக்கம் பிடிச்சிருக்கு ‘ என சொல்லி
காயத்திரி அந்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டிற்கு அழச்சிகிட்டு போகலாம்’
என சொன்னதுதான் தாமதம் ரோஜாவுக்கு சந்தோஷம். பெரியவுங்க கண்ணுல ஆனந்தக்
கண்ணீர் சொட்டுன்னு விழுந்துச்சு. நாலுபேரும் வீட்டுக்குள்ள
நுழையும்போதுதான் ஊரைக்கூட்டி வச்ச முத்தம்மா ஆச்சி ‘யாரும்மா இவுங்க’ன்னு கேட்டுச்சு ரோஜா சொன்னா ‘இவுங்கதான் எங்களோட தத்து அம்மா அப்பா நாங்க அவுங்க பிள்ளைங்க’ன்னு
சொன்னதும் ‘நீங்க நல்லா இருக்கனும் உங்களைப் போல நாட்டுல ஆணும் பொண்ணும்
இப்படி இருந்துட்டா எங்களப் போல வயசான கிழடுக கோயில குளத்துக்கு எதுக்குத்
தாயீ போகணும்.ஒங்க மனசு பெரிய மனசு தாயீ’ன்னு
சொல்லி முத்தம்மா ஆச்சியின் கைகள் தன்னையறியாமல் ஒன்றுசேர்ந்து
கும்பிட்டது.கூடியிருந்த பொம்பளங்களுக்கும் இந்த பிள்ளைங்களோட மனசு
பெரிசாத் தெரஞ்சது.வீட்டுக்கு வந்த முதிய தம்பதிகளுக்கு அவுங்களுக்கு
இன்னைக்குத்தான் ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கிற ஆனந்த வெளிச்சம்
மனசெல்லாம் ஊடுருவிப் பாஞ்சது.
யூகோ.ரொஸ்
வணிகவியல் மூன்றாமாண்டு
விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம்
No comments:
Post a Comment