சமூக நீதிக்கான கல்வியை ஜனநாயகப் படுத்த ……
சென்னை மாநகரத்தில்
சாந்தி தியேட்டருக்குப் பக்கத்து ரோட்டரத்தில் ஒரு மாலை வேளை. அம்மா டிரம்ஸ் அடிக்க,
அப்பா தன்னுடைய உடம்பை சாட்டையால் அடித்துக் கொண்டிருக்க பத்துவயது சிறுமி இருபது அடிதூரம்
இழுத்துக்கட்டப்பட்ட கம்பியில் கையில் மூங்கில் கம்பையும் ,காலில் அலுமினியத் தட்டை
மிதித்துக் க்கொண்டும் நகர்ந்து சாகசம் எ\செய்துவிட்டு,மிதித்திருந்த அலுமினியத் தட்டைஏந்தி
பர்வையாளர்களிடம் நீட்டிக் காசு சேகரிக்க 4 வயது சிறுமி விரித்த துணியில் விழுந்த காசுகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான். எல்லோரையும்போல நானும் ஐந்து ரூபாயை எடுத்துப் போட்டுவிட்டு
பள்ளியுல் படித்துக்கொண்டிருந்த என் மகளைப் போல இச்சிறுமி பள்ளிக்குப் போக முடியாமல்
வறுமை இவர்களை வீதியில் வீசிவிட்டதே என வருத்தப்பட்டேன். 52 பேரை உலக கோடீஸ்வரன்களின்
பட்டியலில் சேர்த்து ஒளிரும் இந்தியாவில்தான் அரசு நியமித்த அர்ஜூன்சென் குப்தா அறிக்கை
77 சதமான மக்கள் நாளொன்றுக்கு செலவு செய்யும் அளவோ ரூ 20 மட்டுமே என சுட்டிக் காட்டுகிற
கொடுமையில் ஒரு பகுதிதான் மேற்குறிப்பிட்ட சிறுமி, சிறுவனின் நிலை. 63 வருட சுதந்திர
இந்தியாவில் இந்த அசமத்துவத்தை போக்குவதற்கு மிகப் பெரிய அறஞர்களுக்கு கல்வியாளர்களுக்கு
வாய்ப்பையோ பக்குவத்தையோ வழங்கியிருக்கிறதா இந்தக் கல்வியும் அமைப்பும்?
ஒரு ஊரில் அப்பாவை சிறுவயதிலேயே இழந்த 13 வயது
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த சிறுவன் பள்ளிக்குச் சென்றுகொண்டே விடுமுறை நாட்களில்
மரணவீடு,திருமணவீடு, சாமிகும்பிடு வைபவங்களுக்கு தன் இனத்தாரோடு பறையடிக்க செல்லவேண்டிய
கட்டாயம். கோயில் திருவிழாவுக்குச் சென்றால் வீடுவீடாக சோறு வாங்குவதும் வீட்டுக்கு
கொண்டு வருவதும் வழக்கம். அப்படி ஒருநாள் திருவிழாவுக்கு பறையடிக்கச் சென்று சோறு வாங்கியபோது
ஒரு வீட்டில் 40 வயது மதிக்கத்தக்க வீட்டுக்காரப் பெண் சுடச்சுட சோறு போடுவதுபோல் பாவனையோடு
போட்டார். சற்று நகர்ந்ததும் தொட்டுப்பார்த்தால் முதல்நாள் சமைத்த சோளச்சோறு. அரிசிச்சோறு
கிடைக்கும் என்றிருந்த ஆசைகூட நொறிங்கிப் போனது ஒருபுறம். ‘இந்தச் சாதிக்காரன் எதைப்
போட்டாலும் சாப்பிடுவான்’என்ற ஆதிக்கப்புத்தி மறுபுறம். அவன் படிக்கும்காலத்தில் கூனிக்
குறுகியே சிறுவயதுமுதல் பெரியவர் வரை சாமி சாமி என்று கூப்பிடும் கொடுமைக்கு ஆளாகியே
வாழ்ந்தான். எதிர்த்துப் பேசினால் அவனைச் சார்ந்தோர் ஒடுக்குபவர்களின் தோட்டத்தில்
வேலைக்கும் விடமாட்டார்கள்.கூலியும் கிடைக்காது.
மேற்குறிப்பிட்ட அந்தரத்தில் கம்பியில் நடக்கும்
சிறுமியின் வறுமையைப் போல 70 சதமன அனைத்து சாதி மதத்தாருக்கும் தாண்டவமாடும் கொடியநோய்
வறுமை. இரண்டாவது குறிப்பிட்டிருந்த சிறுவனை அடிமைத் தொழிலுக்கு தள்ளப்பட்டதோடு, தாகம்
எடுத்தால் கையில் தண்ணீர் வாங்கி குடிக்கும் கொடுமையும்,ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒதுக்கிவைத்து
உதாசீனப் படுத்தும் தீண்டாமைக் கொடுமையும் வறுமை என்ற பொதுவான கொடுமையும் சேர்ந்தே
உதைக்கின்றன.
சுதந்திர இந்தியாவில் 1950ல் இந்திய குடியுரிமைப்
பாதுகாப்புச் சட்டம் தீண்டாமையை ஒழிக்க இயற்றிய சட்டம் செயல்படாத காரணத்தால் 1989ல்
வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டது.வறுமை ஒழிக்கப்பட்டதா? தீண்டாமை விரட்டப்பட்டதா?
தீண்டாமை நர்த்தமனாடும் கிராமங்களில் படித்துப் பட்டம் பெற்று அதிகாரிகளாக மந்திரிகளாக
இஞ்சினயர்களாக ஆசிரியர்களாக அரசு ஊழியர்களாக உயர்ந்தவர்கள் குமரி மாவட்டத்தில் பிறந்த
தோழர் ஜீவாவைப் போல, மதுரை தோழர் ராமமூர்த்தியைப் போல எத்தனைபேர் இந்த சமூகத்தின் இக்கொடிய
நோய்கள்மீது எதிர்வினை புரிந்தார்கள்? தீண்டாமை கடைப்பிடிக்கும் தனது சாதிக்காரர்களிடம்
தடுத்து நிறுத்த இந்தக் கல்வி தைரியத்தை ஊட்டியுள்ளதா?
சமூக ஒடுக்குமுறை பற்றியோ சாதிகளின் ஆணிவேர் பதிந்த
தேசம் என்றோ,இந்த வேர்களில் வெந்நீர் பாய்ச்ச வேண்டுமென்றோ நம் உயர்கல்வி பாடத்திட்டம் கவலைப் பட்டதுண்டா? வகுப்பறைகள் சமூகப் பாகுபாட்டின், ஒடுக்குமுறையின் கோரத்தனத்தை விவாதங்களாக விதைத்துள்ளனவா?
அய்யா வைகுண்டர், ஸ்ரீமன் நாராயணகுரு, வடலூர் வள்ளலார்,
தந்தைபெரியார், தோழர் ராமமூர்த்தி, தோழர் ஜீவா, மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,தோழர்
பி. சீனிவாசராவ் ஆகியோரின் மகோன்னத தீண்டாமை எதிர்ப்புக் கலக வரலாறை வகுப்பறைக்குள்
உலவ விட்டதுண்டா?
1964ல் டாக்டர் கோத்தாரி கமிஷன் கூறிய கல்வி சமூக
மாற்றத்திற்கான கருவியாக இருக்கவேண்டும். ஆசிரியர்கள்தான் தேசத்தை
நிர்மானிப்பவர்கள்
என்ற கல்வித் திட்டமாவது நடைமுறைக்கு வந்ததா?
ஊரிஸ் கல்லூரி பேராசிரியர் முனைவர் இளங்கோவன்
‘வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே என்னிடம் வராதீர்கள்’ என்ற ஒரு புத்தகம் வெளியிட்டு
இருக்கிறார். அதில் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள்,
உதவிபெறும் சிறுபான்மைக் கல்லூரிகள், ஆசிரியப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில்
நியமிக்கப்பட்ட விபரத்தை தெளிவுபடுத்தி பட்டியல் காட்டியுள்ளார். உதவிபெறும் கல்லூரிகளில் தேவையான அளவு பட்டியலின ஆசிரியர்களை நியமிக்கவில்லை
என்பதையும், சிறுபான்மைக் கல்லூரிகளில் தலித் கிறிஸ்தவர்களை சில கல்லூரிகளைத்தவிர மிகக்
குறைந்த அளவு நியமித்துள்ளார்கள் என்பதையும் காட்டுவது படித்தவர்கள் வெளிப்படுத்தும்
பேதம்தானே? ‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’என்ற அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு வைர வரிபோல இந்த கல்வி அமைப்பு சமத்துவக் கல்விமூலம் அடித்தட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் அரசும் கல்வியாளர்களும் சிந்திக்காமல் தற்காப்பதுவேறு யாரால் முடியும்?
உதவி பெறும் கல்லூரியில் தலித் வகுப்பில் நியமனம் செய்யப்பட்ட முதல்வரை பூதக்கண்ணாடி வைத்து த்தான் பார்க்கவேண்டும்.
உதவி பெறும் கல்லூரியில் தலித் வகுப்பில் நியமனம் செய்யப்பட்ட முதல்வரை பூதக்கண்ணாடி வைத்து த்தான் பார்க்கவேண்டும்.
தந்தை பெரியார் ‘நம் நாட்டில் ஆரியர் ஆதிக்கம், வருணமுறை ஏற்ப்பட்ட காலம் முதல் நமக்களிக்கப்படும் படிப்பு, நாம் படிக்க
முடிகிற படிப்பு அப்படிப்பட்டது. எப்படியென்றால் பெரிதும் அயோக்கியத் தனத்துக்கும்
பித்தலாட்டத்துக்கும் மற்றவனை ஏமாற்றி பிழைப்பதற்குத் தூண்டுவது,நடத்துவது தவிர வேறொன்றுக்கும்
பயன்படாது என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னதை நினைவு
கூறத்தான் வேண்டும்.
மூன்றாம் உலக நாடுகளுக்கான விடுதலைக் கல்வியாளராகிய
பாவ்லே ஃப்ரெய்ரே ‘ கல்விமுறை இருக்கிற சமூக அமைப்பிற்கு தக்கவராக மனிதரை வசப்படுத்துவதற்காகவோ
அல்லது இருக்கிற சமூக அமைப்பை கவிழ்த்து,மனிதரின் விடுதலைக்கு வழிவகுப்பதற்காக மட்டுமே
கல்வி இருக்க முடியும்…. கல்வி என்பது ஒர் அரசியல் செயல்பாடு.அதிகாரத்தைப் பகுப்பாய்வு
செய்யாமல் கல்வியை பகுப்பாய்வு செய்யமுடியாது.’
எனவே இக்கல்விமுறை இன்றிருக்கும் சாதியச் சமூக
முறையை, சுரண்டலைப் பாதுகாக்கின்ற அதிகாரக் குவியல் மையத்திடம் இருப்பதால் சமூக மாற்றத்திற்கான,
ஒடுக்குமுறையை விரட்ட கல்வியை சமூக மாற்றக் கருவியாக மாற்றுவது சுலபம் இல்லை.
பல்வேறு தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மனித
உரிமை அமைப்புகள் தலித் அமைப்புகள், தலித் அல்லாத சாதிகளில் முற்போக்கு எண்ணங்கொண்ட
சமூக ஆர்வலர்கள் அடங்கிய தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி 16.8.2007ல் பிறந்து 22 மாவட்டங்களில் 1845 கிராமங்களில் 82 வடிவங்களில் வன்கொடுமை வடிவங்களும் தமிழகத்தில்
தொடர்வதை அம்பலப்படுத்தி,அவற்றிற்கெதிராக போராடுகிற பல ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடத்தி
வெற்றியும் பெற்று ஜொலிக்கிறது. தொழிற்சங்க பொருளாதார கோரிக்கைகளோடு, சமூக ஒடுக்குமுறைக்கெதிராகவும்
பார்வையை செலுத்தியுள்ளது.
கள அனுபவங்கொண்ட அந்த அமைப்பிலிருந்து கற்றுக்கொண்டு
உயர்கல்வியை ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக
பல்கலைக் கழகத்தில், பாடத்திட்டத்தில் ,கல்வியாளர்களின் மனங்களில் விவாதப் பொருளாக்குவதோடு,
கல்வியில் பாடத்திட்ட ஜனநாயகத்தை உருவாக்க கல்வயாளர்களை காலம் அறைகூவி அழைக்கிறது.
பாடத்திட்ட ஜனநாயகம் சமூகநீதியை உயர்த்தும்.
நன்றி;20ம் மூட்டா மாநாட்டு சிறப்பிதழ்
No comments:
Post a Comment