Wednesday, June 17, 2015

திரைபடப் பாடல்களில் சமூகம்


தீர்ப்பு புதிதல்ல.இந்த சமூக அமைப்பில் எதிர்பார்த்த ஒன்றுதான்.இதைவிட மாறி வந்திருந்தால்தான் ஆச்சரியம்.
எனக்கு கவிஞர் பரிணாமன் முப்பது ஆண்டுகளுக்குமுன் எழுதியது இன்னும் பாடிக்கொண்டே வருகிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
‘ பத்துத்தலை ராவணனை ஒத்தத்தலை ராமன் வென்றான்
 மொத்தத்தில வீர்ம் வேணும் சுடலைமாடா-இந்த
 வித்தைகளைக் கத்துக்காம சத்தியத்தை ஒத்துக்காம
 கத்தினா போனதெல்லாம் கிடைக்குமாடா

ஒட்டுக்கேட்டு கையெடுத்து கோட்டையில் பையெடுத்து
மூட்டை மூட்டையா அடிக்கான் சுடலைமாடா-இந்த
நாட்டைக்கூட விலைபேசி ராத்திரியில் வித்திருவான்
லஞ்சத்துக்கு பொறந்ததிந்த ஆட்சி அமைப்புடா’ என்பதுதான் அவ்வரிகள்
இப்போது ராத்திரியில் விற்கவேண்டாம்.பட்டப்பகலிலே விற்றுக்கொண்டுதான் வருகிறார்கள் .மக்கள் என்ன கண்டுகொண்டா இருக்கிறார்கள்? நல்ல தேசமடா சாமி!




No comments:

Post a Comment