Wednesday, June 17, 2015

இந்தியாவில் சாதி

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர். C.Rajaram  தமிழர்களும் சாதியும்.கட்டுரையில்
   ‘ சாதி ஒரு மனிதனின் உயிராற்றலை அழிக்கிறது.இது வீரியத்தை இழக்கச் செய்யும் வளர்ச்சிப் போக்காகும்.சுதந்திரம் முழு மனித வளர்ச்சியும் பெறவேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி, செல்வம்,தொழில் ஆகிய அனைத்தும் அவசியமாகும். செல்வமும் தொழிலும் அற்ற வெற்றுக்கல்வி மலடானது, கல்வியும் தொழிலும் இல்லாத செல்வம் முரட்டுத்தனமானது.ஒவ்வொருவருக்கும் இந்த ஒவ்வொன்றும் அவசியமானது. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு இவை அவசியமானவை.’ (பக்;ஆர் சி தத் 139 இந்துயிசத்தின் தத்துவம் பி ஆர் அம்பேத்கர்)
    சாதி தொழிலாளர்களைப் பிரிக்கிறது. 2.சாதி தொழிலாளர்கள் விருப்பத்தோடு பணிபுரிவதைப் பிரித்து விடுகிறது. 3. சாதி உடலுழைப்பிலிருந்து அறிவைத் துண்டிக்கிறது. 4.வாழ்க்கைக்கான முக்கிய ஆதாரங்களை திரட்டிக்கொள்ளும் உரிமையை மறுப்பதன் மூலம் சாதி தொழிலாளியின் உயிராற்றலை அழிக்கிறது.5. சாதி ஒன்று திரள்வதை தடுக்கிறது.சாதி அமைப்பு வெறுமனே தொழிற் பிரிவினை மட்டுமல்ல,இது தொழிலாளர் பிரிவினையுங்கூட.இது ஒருவருக்கு மேலே ஒருவர் என்ற ரீதியிலான அடுக்குமுறைத் தன்மை கொண்டது. வேறெந்த நாட்டிலும் தொழிற்பிரிவினையும்,இம்மாதிரியான தொழிலாளர்கள் அடுக்குமுறையும் இணைந்து இருக்கவில்லை.( பி ஆர் அம்பேத்கர் பக் 136 இந்துயிசத்தின் தத்துவம்)
      பகவத்கீதையில் கிருஷ்ணனின் அறிவுரை;
நால்வருண முறையை உருவாக்கியவன் நான்தான்.அவர்களுடைய இயற்கை திறமைகளுக்கேற்ப மாறுபட்ட தொழில்களை நிர்ணயித்தவனும் நான்தான்.
    மற்ற வர்ணத்தொழிலை செயவது சுலபமானது என்ற போதிலுங்கூட தன் சொந்த வர்ணத் தொழிலைச் செய்வதே பாராட்டுக்குரியது.தன் வர்ணத் தொழிலை திறமையாகச் செய்ய இயலவில்லை என்ற போதிலுங்கூட அதையேதான் செய்யவேண்டும்.தன் சொந்த வர்ணத் தொழிலைச் செயவதினால் மரணம் நேரிடும் என்ற போதிலுங்கூட அதைச் செய்வதில் இன்பமிருக்கிறது. ஆனால் மற்ற வர்ண தொழிலைச் செய்வதில் அபாயமிருக்கிறது.
 மனுவின் சட்டங்கள்;
10;3; பார்ப்பனன் (எல்லா)வர்ணங்களுக்கும் மேலானவன். பிறப்பினால் உயரந்தவன்; சம்பிரதாயங்களை முறையாக கடைப்பிடிப்பவன்; புனிதன், இதனால் அவன் அனைத்து சாதிகளுக்கும் எசமானனாக இருக்கிறான்.
1 ; 93 (பிரம்மாவின்) வாயிலிருந்து பார்ப்பனன் பிறந்தாலும் அவன்தான் முதலில் பிறந்தாலும் வேதங்களுக்கு உரிமையாளம் அதலாலும் தன் உரிமையின் காரணமாக அனைத்து படைப்புகளின் எசமானன் அவனே.
1 ; 96 அனைத்து படைப்புகளிலும் மிகச் சிறந்தது உயிரினங்களே.அவற்றிலும் மிகச் சிறந்தது தன் அறிவால் வாழ்பவர்களே; அறிவில் சிறந்தது மனிதகுலம; அதிலும் சிறந்தவர்கள் பார்ப்பனர்களே.
1; 99 ஒரு பார்ப்பனன் பூமியிலே உயர்வானவனாகப் பிறக்கிறான். அனைத்து உயிர்களின் எசமானனாக இருக்கிறான். தர்ம விதிகளைக் காக்கவே இவ்வாறு பிறக்கிறான்.
1;100 இந்த உலகில் உள்ள அனைத்துமே பார்ப்பனர்களுக்குச் சொந்தமானவை. தனது பிறப்பின் மேன்மை காரணமாக இவை அனைத்துமே அவனுக்கு உரியதாக்கப்படுகிறது.
7 ; 37 அரசன் வைகறையில் துயலெழுந்து,பார்ப்பனனிடம் மரியாதையாக நடந்து மூன்று வேதங்களையும் அறநெறிகளையும் கற்று அவர்தம் வழிப்படி ஆட்சி செய்யவேண்டும்.
1;38 கல்வியிலும் வயிதிலும் மூத்த –உள்ளும் புறமும் தூய்மையான-சாத்திரங்கள் கற்ற- மூத்த பார்ப்பனனை எப்பொழுதும் அரசன் மதித்து நடக்கவேண்டும். காரணம் மூத்த வயதினரை மதிப்போருக்கு தீய ஆவிகளாலும் அச்சம் நேரிடாது.
9 ; 35 பார்ப்பனன் இந்த உலகத்தைப் படைத்தவனாக அறிவிக்கப்படுகிறான்.தவறுக்குத் தண்டனை தருபவன் அவனே.ஆசிரியனும் அவனே.எனவே அவனுக்கு விருப்பம் தராத வார்த்தைகளைச் சொல்வதும அவனை எடுத்தெறிந்து பேசுவதும் கூடாது.
10;123 பார்ப்பனனுக்கு ஊழியம் புரிவது ஒன்றே சூத்திரனின் மிகச் சீரிய தொழில் ஆகும். மற்ற எதுவுமே அவனுக்கு உரிய பலனைத் தராது.
10; 129 சூத்திரனால் செல்வம் சேர்க்க முடிந்த போதும் அவ்வாறு அவன் செய்யக்கூடாது. காரணம் செல்வம் சேர்த்துக்கோண்ட ஒரு சூத்திரன் பார்பனனுக்கு வருத்தத்தை உண்டு பண்ணிவிடுவான்.


No comments:

Post a Comment